விழுதுகள்

0
182

கலைவாணி இளங்கோ

இந்த ஆலமரத்து விழுதுகளைக் காணும்போது என் தாத்தா பாட்டிமாரின் நினைவுகள் என்னை மெல்ல வருடுகின்றன. ஆலமரத்து விழுதுகளைப் போலவே எனது நினைவுகள் உறுதியாகவே இருக்கின்றன. சிறு வயதில் தாத்தா பாட்டி வசிக்கும் ஊருக்குப் போகும்போது பல மரங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது .இருப்பினும் ஆலமரத்து சிறப்புகளைக் கேட்டப்போது எனக்கு வியப்பாக இருந்தது.

என் தாத்தா சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக வேலை செய்துவந்தததால் இங்குள்ள பல்லின சமுதாயத்தின் மகித்துவத்தை அறிந்திருந்தார். அதைப் பற்றி மீண்டும் வலியுறுத்த எனது தாத்தா அவரின் ஊரின் ஒதுக்கப்புறமாக இருக்கும் ஆலமரத்தைக் காட்டச் சென்றார். உலகப் புகழ்பெற்ற அடையார் ஆலமரத்தைப் போல இருக்கும் என்று எண்ணினேன். இது கிட்டத்தட்ட 100 பேர் உட்காரும் அளவிற்கு நிழலைக் கொண்டிருந்தது. எப்படி நம் சிங்கையில் சீனம் , மலாய், இந்தியர்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்களோ அதைப் போலத்தான் இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் காலத்தில், இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் வர்த்தகர்கள் ஆலமரத்தடியில் சந்தைகள் கூடுவதைப் பார்த்தனர். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மொழி இன வேற்றுமைக்கு அப்பால் ஆலமரத்தடியில்தான் வியாபாரங்கள் நிகழ்ந்துவந்தன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பனியாக்கள் (வியாபாரிகள்) ஒன்றுகூடிப் பணம் பரிமாரிக்கொள்வர் என்பதை அன்று தான் அறிந்து கொண்டேன். இச்செய்தி எனக்கு மிகவும் வியப்பை அளித்தது.

அடுத்து, ஆலமரம் வாக்கின் அடையாளமாம். பேரம் பேசும்போது ஆலமரத்தின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட பணம் எப்படியும் வந்துவிடுமாம். வர்த்தகர் கூட்டத்தைக் குறிக்கும் ‘பனியாவே’ – ஆங்கிலத்தில் மரத்தின் பெயரானது. இதுவே ‘பானியன் ட்ரீ’ என்று பெயர் வந்த வரலாறு. தொடக்கநிலை நான்கில் இச்செய்தியை அறிந்த நான் அந்த ஆண்டு நடந்த பேச்சுப்போட்டியில் ஆலமரத்துச் சிறப்புகளைப் பற்றிப் பேசி ஆறுதல் பரிசை வென்றேன். எத்தனையோ குடும்பங்களுக்கு ஆறுதலாக இருந்த ஆலமரம் எனக்கு ஆறுதலாக இருந்தது.

நான் என் தாத்தாவோடு அந்த ஊர் ஆலமரத்து நிழலில் அமர்ந்தேன். ஒரு பக்கம் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். மற்றோரு பக்கம் சில இளையர்கள் அங்கு நின்று பேசிக்கொண்டிருந்தனர். பெண்பிள்ளைகள் அங்கு உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தனர். மேலும், கருமேகங்களைச் சுண்டியிழுக்கும் மழைக் கவர்ச்சி மரங்களில் முதலிடம் ஆலமரத்திற்குத்தான். இப்போது தெரிந்தது ஏன் என் தாத்தா பாட்டியின் ஊர் பச்சை பசையன இருந்தது. மேலும் இந்த மரத்திற்கு அது தனக்குத்தானே நடவு செய்துகொள்ளும் ஆற்றல் உள்ளது. ஆச்சரியமாக இருந்தது.

வீட்டிற்கு வந்ததும், பாட்டி மேலும் ஆலமரம் பற்றிய மருத்துவக் குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார். வாய்ப்புண், கரப்பான், சிரங்கு போன்ற நோய்களுக்குத் தாத்தாகாலத்து நாட்டு மருத்துவர்கள் ஆலம்பாலில் விழுதுக் கொழுந்தைச் சேர்த்துக் களிம்பு தருவார்கள். ஆலமரத்தின் எல்லா பாகங்களும் அருமருந்து தான்! நீரழிவு நோய்க்கு ஆலம்பட்சைச்சாறே மருந்து. ஆலம்பழ ரசத்தில் கற்பூரத்தூள் கலந்து கண்நோய்க்கு (சுக்ரரோகம்) மருந்தாக சக்ரதத்தா பரிந்துரைத்துள்ளார். ஆலம் விழுதின் நுனி வாந்தியை நிறுத்தும். ஆலைப்போல், வேலைப்போல் ஆலம் விழுதினைப்போல் ஒப்பற்ற பல்லுக்கும் குச்சிக்கும் வேறுண்டோ. பல் உறுதிக்கு ஆலம் விழுதில் உள்ள மருத்துவப் பொருள் காரணமாகும். நிழல் தரும் இந்த நெடிய மரம் நமது நாட்டிலும் வளர்ப்பது அவசியம் என்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்தேன்.

Leave a Reply