About us

Tamilwing.com is the voice of Tamil people. Formed on the ideas of independent, constructive and quality journalism. This is a Tamilar media.

தமிழ்விங் தளமானது தமிழர்களின் குரல். தற்சார்பு, ஆக்கச்செழுமை, மற்றும் தரமான இதழியல் ஆகிய கருத்துக்களில் உருவாக்கப்பட்டது. இது ஒரு தமிழர் ஊடகம்.

தமிழ் ஊடக வெளியை ஆக்கிரமித்துள்ள எதிர்மறை, அவதூறு, கலவரம் சார்ந்த செய்திகளைத் தவிர்த்து விட்டு; தமிழர் வாழ்வின் மேம்பாடு, புதிய சிந்தனை, புதியவை அறிதல், தகவல் அறிவு உயர்வு, முன்னேற்றம், எனத் தீர்வு மையப்படுத்தப்பட்ட, ஆக்கச்செழுமை கொண்ட படைப்புகளை, செய்திகளை வெளியிடுவது மட்டுமே தமிழ்விங் தளத்தின் முதன்மையான குறிக்கோள்.

தமிழ்விங்.காம் தளமானது தமிழர்களுக்கான ஊடகம். தமிழர்களுக்கான தகவல் தளம். தமிழின் சிந்தனை முகம். தமிழர்களின் உயர்வுக்கான களம். இதில் வெளிவரும் கட்டுரை, படைப்பு, செய்தி ஆகியவற்றின் கருத்துக்களுக்கு, அவற்றின் ஆசிரியர்களே பொறுப்பு.

படைப்புகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: TamilWingMedia@gmail.com
கட்டுரை, படைப்பு, செய்தி ஆகியவை “தமிழ் வளர்ச்சி, தமிழர் வளர்ச்சி, ஆக்கச்செழுமையான கட்டுரைகள், ஆக்கச்செழுமையான படைப்புகள், தமிழர் வாழ்க்கை மேம்பாடு” என்கிற வகையில் இருக்க வேண்டும்.

ஆசிரியர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் ஆக்கங்கள் மட்டும் தமிழ்விங் தளத்தில் வெளியிடப்படும். வெளியிடத் தோதான படைப்புகளைத் தேர்ந்தெடுக்க ஒருவார கால அவகாசம் தேவை. இத்தளத்தில் வெளியாகும் ஆக்கங்கள் குறித்த தகவல் அதன் ஆசிரியருக்குத் தெரிவிக்கப்படும்.

வாசிப்போம் நேசிப்போம் வளர்வோம் உயர்வோம்.

அன்புடன்
மாயன் மெய்யறிவன்
நிறுவன ஆசிரியர் – தமிழ்விங்.காம்

#தமிழ்விங் #தொடர்ந்து_எழுதுங்கள் #தொடர்ந்து_படியுங்கள்
#வாசிப்போம் #நேசிப்போம் #வளர்வோம் #உயர்வோம்
#தற்சார்பு #ஆக்கச்செழுமை #தரம்
#TamilWing #TamilWingMedia