முதல்வர் எடப்பாடியார் பாஸ் ஆகிவிட்டார்

4
235

கணேஷன் குருநாதன்

10-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாகவும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும் என்றும், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80% சத மதிப்பெண்களும், பள்ளிக்கு வருகை புரிந்த நாட்களின் அடிப்படையில் 20% சத மதிப்பெண்களும் கணக்கிடப்பட்டு, ஒவ்வொரு பாடத்திற்குமான மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் கூறி உள்ளார்.

2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, கொரோனா வைரஸ் மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி விட்டது. இந்தச் சூழலில், தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலாக இருப்பதால், மாணவர்களின் உயிர் நலன் கருதி, தேர்வுகளை ரத்து செய்து, அவர்கள் தேர்ச்சி பெறவும் சிறந்த வழியை அறிவித்து, தமிழக வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எடப்பாடியார் என்று கூறினால், அது மிகை ஆகாது.

பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் மனதில் இடம் பிடித்து, எடப்பாடியார் பாஸ் ஆகிவிட்டார்.

4 COMMENTS

  1. மாணவர்களையும் பெற்றோர்களையும் கலந்தோசிக்காமல் எதிர்க்கட்சிகளின் பழிக்கு அஞ்சி ஓட்டுகளுக்காக எடுக்கப்பட்ட ஏதோச்சக்கார முடிவு……

    மாணவர்களின் மன உளைச்சலை இந்த முடிவு அதிகப்படுத்தலாம்….

    • தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

  2. வாழ்த்துகள் எடப்பாடியாருக்கும் மாணவர்களுக்கும் இருப்பினும்
    மதுக்கடைகளையும் மூடிவிட்டார்ன்னா இன்னும் கம்பீரமா இருப்பார் இந்த பெருந்தமிழர். நன்றி

    • தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Leave a Reply