“தங்கல்” திரைப்படம் காட்டும் வாழ்க்கை

மாயன் மெய்யறிவன்

0
1410

அமீர் கான் நடித்த “தங்கல்” படத்தைப் பலரும் பார்த்திருப்போம். பெண்கள் வெவ்வேறு துறைகளில் முன்னேறி சாதிக்க வேண்டும் என்கிற தூண்டுதலையும், அதற்காக அந்தப் பெண்களின் தந்தையாக நடித்துள்ள அமீர் கான் எடுக்கும் முயற்சிகளையும், பலரும் பார்த்து சிலாகித்திருப்போம். தங்கல் படம் பார்க்காதவர்கள், நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம். ஹிந்தி திரைப்படம் என்றாலும், தமிழிலும் இத்திரைப்படம் உள்ளது.

தனது இளம்பிராயத்தில் மல்யுத்தப் போட்டிகள் பலவற்றிலும் வெற்றி பெற்று, பல பரிசுகளையும், பலரின் பாராட்டுக்களையும், புகழையும் பெற்றிருந்த நிலையில், தொடர்ந்து அதே துறையில் சாதனைகள் பல செய்து, உலக அளவிலான மல்யுத்தப் போட்டியில் வென்று, இந்தியாவின் சார்பாக தங்கப் பரிசு வெல்லும் தனது கனவை விட்டுவிட்டு, மிகச் சாதாரண அலுவலக வேலையில், அமீர் கான் சேருவார். இதற்கான முக்கிய காரணம்; திறமை, புகழ், பாராட்டுக்கள் கிடைத்திருப்பினும், அவரது குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருந்த நிலை தான்.

புகழ், பாராட்டுக்கள், கைதட்டல்கள், தங்களைச் சுற்றி ஆர்ப்பரிக்கும் கூட்டம் ஆகியவற்றை விட, வாழ்க்கையில், ஒவ்வொருவரின் “பொருளாதார முன்னேற்றம்” மிக மிக அவசியமானது.

நாம் மற்றும் நமது குடும்பம், நிறைவான பொருளாதார வசதிகள் பெற, பொருளாதார முன்னேற்றத்தில் கவனமாக செயல்படுவது மிக அவசியம்.

இளம் பிராயத்திலிருந்தே பொருளாதாரத்தின் அவசியத்தையும், முன்னேற வேண்டிய அவசியத்தையும் கற்க வேண்டும். காலமும் இளமையும் போனால் திரும்ப வராது என்பது முதுமொழி என்றாலும் உயிர் மொழி. உழைப்பினாலும் அறிவினாலும் சேர்த்த பணத்தை, எதிர்கால நலனுக்கைன சேமிப்பது, சரியான வகையில் முதலீடு செய்வது ஆகியவற்றிலும் தமிழ் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

தங்கல் என்கிற ஹிந்தி வார்த்தைக்கு மல்யுத்தம் என்பது பொருள். படத்தின் கதையை இக்கட்டுரையில் விபரிப்பது நோக்கம் அல்ல. அது உணர்த்தும் வாழ்வு தான் பிரதானம்.

மாயன் மெய்யறிவன்

Leave a Reply