திருத்தணிகாசலம் – எப்போது சிறையிலிருந்து மீள்வார்?

கணேஷன் குருநாதன்

2
865

கொரோனா உலக மக்களிடம் புதுவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பல தொழில்கள் பாதிக்கப்பட்டு, மக்களின் வாழ்வாதாரம் சங்கட நிலைக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டுள்ளது. இந்த பேரிடர் சூழலிலிருந்து எப்படி மீள்வது என, ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும், மருத்துவ வல்லுநர்களும், பல ஆலோசனைகளை வழங்கியும், பல வழிகளில் முயன்றும் வருகின்றனர்.

கொரோனாவிற்கு உடனடி தீர்வைத்தரும் மருந்து இல்லாத நிலையில், அல்லது பரிசோதனை படலத்தில் உள்ள நிலையில், பலரும் பல ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்த வகையிலே, ‘சித்த மருத்துவம்’ கொரோனவை குணப்படுத்தும், அதற்கான மருந்தைக் கண்டுபிடித்துவிட்டேன் எனக் கூறியவர் ‘சித்தர் திருத்தணிகாசலம்’. இவருக்கு ஆதரவாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பகிர்ந்தனர், போலவே எதிர்ப்பாகவும் சிலர் கருத்துப் பகிர்ந்தனர். இத்தகைய சூழலில் கடந்த மே மாதம், திருத்தணிகாசலம் (Thiruthanikasalam) கைது செய்யப்பட்டார், பிறகு அவர் மீது குண்டர் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருத்தணிகாசலம் அவர்களுக்கு, ஒரு வழக்கில், ‘எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்’ வழங்கி உள்ளது என்கிற செய்தி இன்று வெளிவந்துள்ளது. இச்செய்தியை, திருத்தணிகாசலம் அவர்களின் ஆதரவாளர்களும், சித்த மருத்துவ ஆதரவாளர்களும், வரவேற்று வருகின்றனர்.

‘சித்த மருத்துவம்’ (Siddha Medicine) என்பது தமிழகத்தின், இந்தியாவின் பிரத்தியேக மருத்துவ சொத்து. சித்தர்களின் அனுபவங்களால், மக்களின் நோய்களைத் தீர்க்க அவர்கள் விட்டுச் சென்ற மரபு வழி மருத்துவ முறை.

Make in India என்கிற திட்டத்தைக் கடந்த 2014-ஆம் வருடம், செப்டம்பர் 25 அன்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்தார். இத்தகைய சுதேசி இயக்கங்கள், நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவம் போன்றவற்றைத் தகுந்த கவனத்துடன் அணுகி, அவற்றை இந்திய மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என, சித்த மருத்துவர்களும், ஆர்வலர்களும், வல்லுநர்களும், மக்களும் விரும்புகின்றனர். பாரத பிரதமர் மோடி அவர்களின் அரசு, தற்சார்பு பொருளாதார கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படும் இந்த காலகட்டத்தில், சித்த மருத்துவத்துறையை மேலும் வளர்த்தெடுப்பது இந்தியர்களின் கடமையாகும்.

சித்த மருத்துவர்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறினால், அதைக் கண்டு அரசு தரப்பினர் சந்தேகம் கொள்வது ஏன்? என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிய செய்தி நேற்று வந்தது, மேலும், சித்த மருத்துவத்தில் மருந்து உள்ளது எனக் கூறினால், அதனைப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் சந்தேகிப்பது ஏன்? என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது, மக்களுக்கான நீதி இன்னமும் இந்த மண்ணில் உள்ளது என்பதையே இது காட்டுகிறது.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”.
என்று உரைத்த, தமிழ்த் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் கூற்றுக்கு ஏற்ப, சித்த மருத்துவ விஷயங்களில், நேர்மையாகவும், ஆதரவாகவும் இந்த அரசு செயல்படவேண்டும்.

தற்போது ஒரு வழக்கில் மட்டுமே நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள நிலையில், குண்டர் சட்ட நடவடிக்கை மீதான விசாரணை முடிந்த பிறகே, அவர் சிறையிலிருந்து வெளிவருவது பற்றிய செய்தி கிடைக்கும் எனத் தகவல்கள் கூறுகின்றன.

கொரோனா என்கிற கொடிய கிருமியை எதிர்க்க, நமது சித்த மருத்துவம் பயன்படட்டும், அது மக்களைக் காக்கட்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.

கணேஷன் குருநாதன்

தொடர்புடைய மற்ற கட்டுரைகள்:
திருத்தணிகாசலம் அவர்களை விடுவிக்க வேண்டும்
மாற்றுக்குரல்கள்

குறிப்பு: செய்திகளைத் உடனுக்குடன் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல செய்திகள் / படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.

2 COMMENTS

  1. உண்மையில் அவர் கைது செய்யபட வேண்டிய காரனம் என்ன?

Leave a Reply