உன் சிறு கை ஊன்றி மெல்ல எழுந்து
குறு குறு பார்வையால் உள்ளம் வென்று
இரு கை நீட்டி எம்மையழைத்து
ஓடி விளையாடி புலம் அளாவி
தூண் பின் ஒளிந்து எட்டி நோக்கி
அகப்படா வெற்றி களிப்பில்
என் தோள் பற்றி மேலேறி
என் கண்ணமதில் நீ அருளும் முத்தம்
அமிழ்தினும் மேன்மையன்றோ?
பா. சிவக்குமார்