எல்லாம் காலச் சூழல்தான்
என்று நாம் கடந்துவிட
முடியாது.
எந்தச்சூழலையும்
நமக்குள் அடக்கிவிடும் ஆற்றல் நம்மிடம் உள்ளது.
ஐம்பூதங்களும்
ஆற்றல் படைத்தவைகள்
என்றாலும்
நம் அகத்தூய்மையே
புறத்தூய்மையை
உரம் போட்டு காக்கும் காரணியாகும்.
நமக்கு என்ன என்று
நாம் ஒதுக்கிவிட்டு செல்வதெல்லாம்
வலியாக
விசமாக
நோயாக
நம்மை வந்து வாட்டும்
வாழ்வையும் இழுத்துப் பூட்டும்.
தங்க. வேல்முருகன்