கடந்து போவோம்

தங்க. வேல்முருகன்

1
134

எதுவும் எப்பொழுதும் நடக்கும்
என்ற மனநிலை நம்மோடு இருக்கும் வரையில்
எதுவும் நமக்குத் துச்சமே.

அச்சமே இல்லாமல்
வாழ்வை நகர்த்தவேண்டும்
அதிசய உலகில் பிறந்த
அதிசயங்கள் நாம்
ஆகையால்

அறிவுரை
சொல்லும்-ஏற்கும் ஆற்றலும்
நம்மோடு வந்தவைதான்
நமக்கானவையும் கூட

இறப்பும் பிறப்பும்
அறிவும் ஆற்றலும்
மற்ற உயிரினங்களிடமும்
உள்ளன
தாமாகவே
பட்டுத் தெளிகின்றன

நாம் மட்டும்தான்
சின்னச் சின்ன
பிரச்சினையைக்
கூட சிகரமாய்
நினைத்து சிகரத்திலிருந்து
சரிந்து விழுகிறோம்

எதையும் கடந்து போகலாம்.
தனிமை
தன்னம்பிக்கை
நிதானம்
முயற்சி
நம்மிடம்
இருக்கும்வரை.

தங்க. வேல்முருகன்

1 COMMENT

Leave a Reply