தமிழால் சிறப்போம்

தங்க. வேல்முருகன்

1
898

தேடியும் வரவில்லை இவ்வுலகை
நாடியும் பெறவில்லை இவ்வுறவை பெற
கோடியும் கொடுக்கவில்லை இம்மொழிக்கு
ஆயினும் கூடி இழுக்கின்றோம் தேராய் செ(எ)ம்மொழியை
வாடிய நிலை வரும்பொழுதெல்லாம்
தமிழை நாடியே தலைநிமிர்வோம்

அறம்தனை வளர்க்கத் தழிழ்தனை படிப்போம்
அழிழ்தா(ல்)ய் பாடியே பெரும் கலைதனை வளர்ப்போம்
ஆதியின் மூலமென தலைமீது சுமப்போம்
அகிலத்தில் மூத்தப் பண் இசைத்து பறைவோம்
பின் தலைமுறைக்கும் இலக்கியத்தை
விதையாய் விதைப்போம்
கதையாய் கதை கதைப்போம்
நம் உணர்வால் கவி வடிப்போம்

ஆறடி அகவாழ்வை தமிழ்க்காற்றில்
அமிழ்து உயிர்ப்பிப்போம்
தமிழினம் தாண்டியும் உலகிற்குக்
கொண்டு சேர்ப்பிப்போம்

அக்காலம் முதல் இக்காலம் வரை மொழியே
நமது முதல் அடையாளம்
தாடிவைத்த வள்ளுவனின் வரிகளே
வாழ்வின் கடிவாளம்
ஈரடி முப்பாலை முன்னேறப் படி
ஓடியோடி உழைத்தாலும் வாழ்வின்
உண்மையை நாடு
வாழ்வு ‘ஆயுத’மே வடிவாக அமைந்தது எம்மொழி
அதற்கொரு இழுக்கென்றால் ‘உடைவாளாய்’ முழங்கி
ஒலித்திடுவோம் எம் தமிழ் மொழியை!

தங்க. வேல்முருகன்

1 COMMENT

Leave a Reply