விளையாட்டுப்
பொம்மைகளுக்கே
விளையாட்டு சொல்லிக்
கொடுக்கும் குழந்தை
நாகரீகத்தை
கற்றுக்கொடுக்கும்
சீவி சிங்காரித்து
உடையணிவித்தும்
மானம் காக்கும்
மகத்துவ சிந்தனையும்
வளரும் குழந்தையின்
சமூக வளர்ப்பும்
ஆச்சரியம் மூட்டும்
பேசாத பொம்மைக்
குழந்தைகளிடம்
பாசம் காட்டும்
தாயும் தந்தையுமான
குழந்தை.
ஆனால்
குழந்தை இல்லாத
தம்பதிகளுக்கு
பொம்மைகள்தான்
என்றும் உயிர் குழந்தை.
தங்க. வேல்முருகன்