வாழ்விற்கு சிறப்பே நேர்மை
நிமிர்ந்து வாழ்வதற்கு
நெம்புகோல்கள் தேவைப்படாத
ஒரு மிகப்பெரும் சக்தி.
நேருக்கு நேராக நிமிர்ந்து நின்று
போர்செய்து வாழ்வை வெற்றிக்
கொள்ளும் வாள்.
சிறு கையூட்டுப் பெற்றுவிட்டு
சிறு பொய் சொல்லிவிட்டு
சிறு களவு செய்துவிட்டு
கடுஞ்சொல்லால்
வாடி வதங்கும் மனம்.
பெருந்தண்டனைப் பெற்று
வாழ்நாள் குற்றமாக வாழ்வதை
தடுத்து நிறுத்தும் வீரம்.
சீர்தூக்கிப் பார்த்தோமேயானால்
உயிரும் நேர்மையும் ஒன்றே.
உயிர் இல்லாவிட்டால் உடல் மட்டும்
இயங்காமல் பயனில்லாமல்
அழுகிப் போகும்.
நேர்மை இல்லாவிட்டால்
உடலும் உயிரும் இருக்கும்
வாழ்வில் நிம்மதி இல்லாமல்
போகும் வாடும் வதங்கும்.
தாழ்வை போக்கும் களங்கத்தை நீக்கும்
குனிந்து கும்பிடுபோடுவதையும்
நிறுத்தும் நேர்மை.
நெஞ்சை நிமிர்த்தி நகரவைக்கும்
வாழ்விற்கு நூறு சதவிகிதம்
உத்திரவாதமுள்ள அரும் மருந்நு நேர்மை.
வாழ்விற்கும் சிறப்பே நேர்மை
நேர்மைக்கும் சிறப்பே
நல்வாழ்வு.
தங்க. வேல்முருகன்