திருத்தணிகாசலம் அவர்களை விடுவிக்க வேண்டும்

மாயன் மெய்யறிவன்

0
581

இந்த இந்திய சமூகத்தை கொரோனாவிடம் இருந்து காப்பாற்ற, தன்னாலான உதவிகளைச் செய்யவேண்டும் என்கிற வேகத்தில், உணர்ச்சி மிகுதியால் திருத்தணிகாசலம் பேசி இருக்கலாம், மற்றபடி கைது செய்கிற அளவிற்கு அவர் எந்த தவறும் செய்ததாகத் தெரியவில்லை.

கொரோனாவை கட்டுப்படுத்த தன்னிடம் சித்த மருந்து உள்ளது என அவர் கூறியதை, இக்கட்டான இந்த காலத்தில் ஆய்விற்கு எடுத்துக்கொள்வதில் தவறு ஏதும் இல்லை. அலோபதி நமது தாய்நாட்டிற்கு வரும் முன்பு இருந்தே, நமது முன்னோர்கள் மூலிகை மருந்துகளைத் தான் பயன்படுத்தி வந்துள்ளனர்.

திருத்தணிகாசலம் கூறும் மூலிகை மருந்தானது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆகவே அவர் புதிதாக எந்த மூலிகையையேனும் கலக்கிறாரா? அல்லது ஏற்கனவே உள்ள மூலிகையைத் தான் கூறுகிறாரா? என்பதைக் கண்டறிந்து கூறும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

உலகமே கொரோனாவுக்கு எது மருந்து என திண்டாடும் வேளையில், சித்த மருத்துவம் பற்றி ஒருவர் கூறுவதை கவனத்தில் எடுத்து, அரசாங்கம் ஆய்வு செய்வது தான் சரி.

பாரம்பரிய முறையிலான சித்த மருத்துவம் பார்ப்பவன் என்று தான் திருத்தணிகாசலம் கூறி வருகிறார், எங்கேயும் தான் கல்லூரிக்கு சென்று சித்த மருத்துவம் படித்தவன் என அவர் கூறியதைப் போல தெரியவில்லை. அதே போல அதற்கான பட்டத்தை, அவரது பெயருக்கு பின்னால் பயன்படுத்தியதைப் போலவும் தெரியவில்லை. நிலமை இப்படி இருக்க, அவரை போலி மருத்துவர் என எப்படி வகைப்படுத்த இயலும் எனத் தெரியவில்லை.

கொரோனாவை கட்டுப்படுத்த தன்னிடம் சித்த மருந்து இருக்கிறது எனக் கூறியதைத் தவிர, அவர் எந்த தவறு செய்தார் என்பதை தமிழக அரசு தான் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த இக்கட்டான கொரோனா காலத்தில், டாஸ்மாக் கடைகளை அரசு திறக்கிறது, இதனுடன் ஒப்பிடும் போது, சித்த மருந்து உள்ளது எனக் கூறியது எவ்வகையில் தவறாகும்?

அரசுக்கே வெளிச்சம், ஆண்டவனுக்கே வெளிச்சம்.

மாயன் மெய்யறிவன்

Leave a Reply