தமிழ்விங்.காம் தளத்திற்கு எழுதுங்கள்…!
தமிழக ஊடகங்கள் சரியில்லை என்று சொல்கிறார்கள். ஆக்கச்செழுமையான விஷயங்களை அவர்கள் வெளியிடுவதில்லை என்று சொல்கிறார்கள். எனில் யார் தான் தமிழர்களின் வளர்ச்சி சார்ந்த நல்ல விஷயங்களை எழுதுவது? அவற்றை நீங்களே எழுதலாமே…!
சமூக வலைத்தளங்கள் தான் தற்போது மாற்று ஊடகங்களைப் போலச் செயல்படுகின்றன. நன்றாக ஆக்கச்செழுமையாக எழுதும் பலரை சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது. ஆனால் அவர்கள் எழுதுவது, அவர்களது நட்பு வட்டத்தைத் தாண்டி செல்வதில்லை. இந்த நிலை மாற, உங்களது ஆக்கங்களைப் பலரும் படித்துப் பயன் பெற, தமிழ்விங்.காம் தளத்திற்கு எழுதுங்கள். உங்களது கட்டுரை, கதை, கவிதை என எத்துறை சார்ந்தும் எழுதி அனுப்புங்கள்.
குடும்பத்தலைவி, பொறியாளர், மருத்துவர், சேவைத் துறையினர், தணிக்கையாளர், வழக்குரைஞர், காவல்துறை, தொழில்முனைவோர், மேலாண்மையாளர், சமையல் அறிஞர், விவசாயி பெரியார், பல்கலை ஆசிரியர், பள்ளி தலைவர், சமூக குழு தளபதி, கல்லூரி மாணவர், பள்ளி மாணவர், கவிஞர், எழுத்தாளர், எழுதும் ஆர்வம் கொண்ட புதியவர்கள் எனப் பலதரப்பினரும், உங்களது துறை சார்ந்த, உங்களது அனுபவம் சார்ந்த படைப்புகளை எழுதி அனுப்புங்கள்.
கட்டுரை, படைப்பு, செய்தி ஆகியவை; “தமிழ் வளர்ச்சி, தமிழர் வளர்ச்சி, ஆக்கச்செழுமையான கட்டுரைகள், ஆக்கச்செழுமையான படைப்புகள், தமிழர் வாழ்க்கை மேம்பாடு” என்கிற வகையில் இருக்க வேண்டும்.
குறைந்தபட்சமாக 300 வார்த்தைகளும், அதிகபட்சமாக 2000 வார்த்தைகளும் எனக் கட்டுரைகள், கதைகள் இருக்கலாம். பலருக்கும் பயன் தரும் விஷயங்களை எழுதி அனுப்புங்கள்.
ஆசிரியர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் ஆக்கங்கள் மட்டும் இத்தளத்தில் வெளியிடப்படும். வெளியிடத் தோதான படைப்புகளைத் தேர்ந்தெடுக்க ஒருவார கால அவகாசம் தேவை. தமிழ்விங்.காம் சன்மானமோ, ஊக்கத்தொகையோ தற்போது அளிக்கும் நிலையில் இல்லை, மாறாகத் தமிழர்களுக்கான ஓர் ஆக்கச்செழுமையான வெளியீட்டுத் தளத்தை ஏற்படுத்தித் தரும். தமிழர்களிடையே நல்ல விஷயங்களைப் படிப்போரின் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகச் செயல்படும். புதிய தமிழ் எழுத்தாளர்களுக்கு வெளியீட்டு வாய்ப்புகள் வழங்கப்படும். இவைதாம் தமிழ்விங் தளத்தின் முதன்மையான குறிக்கோள்கள்.
வெளியீட்டு வாய்ப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஊடகங்கள் சரியில்லை, நல்ல விஷயங்கள் வருவதில்லை என்று சொல்லிப் பிரயோசனம் இல்லை…! நீங்களே எழுதுங்கள்.
உங்களது படைப்புகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: TamilWingMedia@gmail.com
வாசிப்போம் நேசிப்போம் வளர்வோம் உயர்வோம்.
அன்புடன்
மாயன் மெய்யறிவன்
நிறுவன ஆசிரியர் – தமிழ்விங்.காம்