ஆளும் கவிதை

தங்க. வேல்முருகன்

0
141

மனங்களின் மதிலில் ஏறி வாழும்
நம்பிக்கை நாளங்களைத்
தட்டியெழுப்பும்.

சமத்துவத் தேரை
எல்லோரையும் சேர்ந்து
இழுப்பதற்கு அழைக்கும்.

வீழும் வாழ்வை தூக்கி
நிமிர்த்தும்.
நீதியின் வாளாகி
அநீதியை வெட்டும்.
அழகுதரும் இயற்கையை
காதலாய் சுற்றிக் காக்கும்.
எல்லா உயிரும்
சமமாமய் மதிக்கும்.
அச்சத்தைப் போக்கி
அறங்களை ஊட்டும்.
அறியாதவர்களை ஏய்க்கும்
கயவர்களை வாட்டும்.
குடிசையில் வாழ்பவரின்
குணத்தை வாழ்த்தும்.
வறியவரின் பசிக்கு உதவாதவரின்
செல்வத்தைத் தாழ்த்தும்.

கதிரவனின் தூரத்து தாகத்தை
தீர்க்கும் கடலாய்
வடிப்பது
ஆளும் கவிதை.

தங்க. வேல்முருகன்

Leave a Reply