யூலிப் திட்டங்கள் – முதலீடு, காப்பீடு, பங்குச் சந்தை, பரஸ்பர நிதி, அதிக வருமானம்

0
304

குரு. கோபாலகிருஷ்ணன் MBA

யூலிப் திட்டமானது (ULIP – Unit Linked Insurance Plan) காப்பீடு மற்றும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடாகும். இங்கு ‘பொறுமை அவசியம்’ இந்தத் திட்டத்தில் இணைந்து யாரெல்லாம் அவசரப்பட்டு வெளியேறினார்களோ அவர்கள் நட்டத்தை சந்தித்திருப்பார்கள். காத்திருந்தவர்களுக்கு அபரிதமான வருவாய் கிடைத்திருக்கும்.
இந்த திட்டத்தை முதன் முதலில் இந்தியாவில் UTI தான் தொடங்கியது பிறகு பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்களும் நடத்த ஆரம்பித்தன. எந்த நிறுவனம் நல்ல முறையில் இந்தத் திட்டத்தை நடத்துகிறது என்று ஆராய்ந்து சேருவது முதலீட்டர்களின் கடமை.

யூலிப் திட்டமானது திட்ட காலம் முழுமைக்குமான செலவு தொகையை முதல் 5 ஆண்டுகளில் பிடித்தம் செய்துவிடும். மீதம் உள்ள தொகை இன்சூரன்ஸ் மற்றும் முதலீடுகளுக்கு செல்லும்.
இன்சூரன்ஸ்+பரஸ்பர நிதி (Mutual Fund) = யூலிப் திட்டம்

யூலிப் திட்டத்தின் அடிப்படை:
1. Secure (or) Protector Fund – இதில் 80% – 100% அரசாங்க பத்திரம், நிரந்தர வைப்புகளிலும், 0% – 20% பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யப்படும்.

2. Balanced Fund – இதில் 50% அரசாங்க பத்திரம், நிரந்தர வைப்புகளிலும், 50% பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யப்படும்.

3. Maximisor Fund – இதில் 0% – 20% அரசாங்க பத்திரம், நிரந்தர வைப்புகளிலும், 80% – 100% பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யப்படும்.

மேற்கூறிய மூன்று Fund-களில் எதில் முதலீடு செய்வது என்பதை அறிந்து செய்தால் பங்குச்சந்தை மூலம்
கிடக்கும் லாபம் நமக்கு கிடைக்கும். மூன்றில் ஏதாவது ஒன்றையோ அல்லது குறிப்பிட்ட சதவிகித அளவில் மூன்றிலுமோ முதலீடு செய்யலாம். இதை நாம் திட்டத்தில் சேரும் போது குறிப்பிடலாம். நாம் ஏதும் குறிப்பிடாமல் முகவரின் விருப்பத்திற்கு விட்டால் அவர்கள் பெரும்பாலும் Secure Fund-ஐயே தேர்ந்தெடுப்பார்கள். இதனால் இன்சூரன்ஸ் மட்டுமே பலனாக இருக்கும், முதல் 5 ஆண்டுகளில் திட்டத்திலிருந்து வெளியேறினால் நாம் செலுத்திய தொகை கிடப்பதே அரிது. மேலும் வருடத்திற்கு 3 அல்லது 4 முறை எந்தவித கட்டணமுமில்லாமல் ஒரு Fund-லிருந்து மற்றொரு Fund-ற்கு மாறிக்கொள்ளலாம். யூலிப் திட்டத்தைப் பற்றி அறியாத பலர் முகவர்களின் வற்புறுத்தலுக்காக சேர்ந்து தங்கள் பணத்தை லாபமாக்காமல் இழந்திருக்கிறார்கள்.

”ஏமாற்றுபவர்களின் மிக முக்கிய ஆயுதம் ஆசையைத் தூண்டுவது”. விட்டில் பூச்சியாக வீழாமல் இதன் சாதக பாதகங்களை தெரிந்து முதலீடு செய்தால் யூலிப் திட்டம் அருமையான திட்டம்.

பரஸ்பர நிதி முதலீடு (Mutual Fund) – இந்தியாவில் புதிய பொருளாதார கொள்கை நடைமுறைபடுத்தப்பட்ட பிறகு, இந்திய பங்குச் சந்தை பெருமளவில் உயர்ந்திருக்கின்றது. அனுபவம் இல்லாமல் நேரடியாக பங்கு சந்தையில் முதலீடு செய்தால் இழப்பு ஏற்படும். பரஸ்பர நிதியம் (Mutual Fund) மூலம் முதலீடு செய்து பங்குச் சந்தை ஆதாயத்தை பெற முடியும். அதுவும் RD (Recurring Deposit) போல மாதாமாதம் சிறு தொகையை SIP (Systematic Investment Plan) செலுத்தி வந்தால் இடர் பெருமளவிற்கு குறைக்கப்பட்டு நல்ல வருவாய் கிடைக்கும். வங்கி, கூட்டுறவு வங்கி, PF (Provident Fund) போன்றவற்றில் ஆண்டு வட்டி அதிகபட்சம் 8% சதவிகிதம் தான் என்ற நிலையில் Mutual Fund முதலீடு கூடுதல் லாபம் தரும். ஆன்லைன் மூலமாக நேரடியாகவே முதலீடு மேற்கொள்ளலாம்.

மியூச்சுவல் பண்ட் என்பது முதலீட்டு அடிப்படையில் கீழ்கண்ட வகைகளில் கட்டமைக்கப்பட்டிருக்கும்.
1. Equity – Equity Fund, ELSS Fund, Index Fund, Sectorial Fund, Large-Mid-Small cap fund – 80% to 100% investing in share market.

2. Hybrid – Balanced Fund – 65% in Equity, 35% in Liquid & Bond.

3. Liquid & Bond – Money market fund, Bond market fund (Government & Corporate) – 100% investing in Liquid & Bond.

இவை அனைத்தும் Growth, Dividend, Dividend Re-Investment என்கிற வகையில் இருக்கும். மூலதன வளர்ச்சிக்கு Growth Option-னையும், ஆண்டு, காலாண்டு, மாதம் வருவாய்க்கு Dividend Option-னையும் தேர்ந்தெடுக்கலாம்.

மியூச்சுவல் பண்ட்டில் நாம் நேரடியாக முதலீடு மேற்கொள்வது Direct Fund எனவும், Broker’s மூலம் முதலீடு மேற்கொள்வது Regular Fund எனவும் பிரிக்கப்பட்டுள்ளது. Regular Fund-ஐ ஒப்பிடும் போது Direct Fund-ல் நிர்வாக கட்டணம் குறைவு.

மியூச்சுவல் பண்ட் முதலீடு நீண்டகால முதலீடாக இருந்தால் நல்ல வருவாய் கிடைக்கும். திட்டமிட்ட முதலீட்டு காலம் முடியும் தருவாயில், எப்போது பங்குச் சந்தை உயர்வில் இருக்கின்றதோ அப்போது நமது Fund-ஐ விற்று பணமாக்கிக்கொள்ளவும்.

யூலிப் மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடு, பணியில் இருப்போருக்கும், தொழில் வருவாய் ஈட்டுவோருக்கும் நல்ல முதலீட்டு திட்டம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் எந்த Fund-ஐ தேர்வு செய்யவேண்டும் என்பதை அறிந்து செயல்படும் போதுதான் முழுவெற்றி கிடைக்கும்.

“பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கை இல்லை” என்று தமது திருக்குறளில், தமிழர் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறி உள்ளதை, இத்தருணத்தில் நினைவுகொள்வோம்.

Leave a Reply