கரோனா காலம்

கலைவாணி இளங்கோ

0
63

வெறிச்சோடிக் கிடக்கும்
கடைகளும் பொருள்களும் ஒருபக்கம்

வியாபாரமே இல்லா
கடை முதலாளிகள் மறுபக்கம்

சொல்ல முடியா சோகத்தை
சுமந்திருக்கும் ஊழியர்களின்
குடும்பப் பாரம் இன்னொரு பக்கம்

கரோனா கிருமித்தொற்றைவிட
இவை கொடூரமாகக் காட்சியளிக்க
வெற்றுப் பணப்பை வெதும்பி நிற்கிறது
சம்பள நாளென்று.

கலைவாணி இளங்கோ

Leave a Reply