வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்

சரவிபி ரோசிசந்திரா

0
810

என் அழகிய உடலை
சிதைத்துக் கொண்டிருந்தான் சின்னச்சாமி.
கிளைகளை வெட்ட
குஞ்சுகள் கூக்குரலிட்டன.
கூடுகள் எல்லாம்
தலைகீழாய்த் தொங்கின.
நெஞ்சம் பதைக்க
அண்ணாந்துப் பார்த்தான் வானத்தை,
வாங்கிய கூலிக்கு வெட்டி சாய்த்திடனும் என வெதும்பி நின்றான்.

வியர்வைச் சொட்ட
மழலை இழந்த தாயைப் போல
கண்ணீர் மல்க ஓர் மரணஓலம் கேட்டது.
யார் என திரும்பி அவனும் பார்க்க
மரத்தின் வேரில் இரத்தம் கொட்டியது.
மீண்டும் நெஞ்சம் பதைக்க
தொட்டுப் பார்த்தான் இரத்த வாடை.
கண்கள் சிவந்து கைகள் நடுங்கி
அழுது புலம்பினான் அம்மாவென்று.
அழாதே என்று ஆறுதலாய் ஓர் குரல் கேட்க
யாரென திரும்பிப் பார்த்தான்.

சற்று மேல்நோக்கி
அழகிய மரந்தனில் பூத்த இளந்தளிர்
அழாதே சின்னசாமி அம்மா நானிருக்கேன் என்றது.
வாழ்வாதாரத்திற்கு என்னை அழிக்காதே
உயிருக்கு ஆதாரம் நான் என மறவாதே
உயிர்வளி இல்லையெனில் உலகம் அழியும்
உங்களைப் பாதுகாக்க எங்களை வாழவையும்
வலியின்றி வாழலாம்
ஆனால் வளியின்றி வாழ முடியுமா?
அன்பு மகனே!
கண்ணீர் சிந்தாதே
எங்களை வாழவைக்க
தண்ணீர் சிந்து
நாங்கள் வாழ்ந்து வளர்வோம்
உயிரைக் காக்க!
உலகைப் பாதுகாக்க!

சரவிபி ரோசிசந்திரா

Leave a Reply