மாணவிகளைச் சிதைக்கும் கொடூரக் கூட்டம்

கணேஷன் குருநாதன்

0
52

ஒரு பெண் பள்ளிக்குச் செல்லமுடியவில்லை.
ஒரு பெண் வேலைக்குச் செல்லமுடியவில்லை.
ஒரு பெண் கோவிலுக்குச் செல்லமுடியவில்லை.

அழுக்கடைந்த மனதுடன்,
சொறி பிடித்த மூளையுடன்,
பெண்களைத் துரத்துகிறது,
சிரங்கு பிடித்தக் கூட்டம்.

காதல் என்றால் என்னவென்றே தெரியாது,
பள்ளி மாணவிகளையும் காமத்துக்காகத்
துரத்துகிறது,
கயவாளிகளின் கூட்டம்.

பெண்களின் பெற்றோர்களிடம்
பணம் பறிக்க,
ஒரு தலைக் காதல் என்று பிதற்றி,
பள்ளி மாணவிகளைத் துரத்தி,
காதலிப்பதாக சொல்
என கொடூரமாக மிரட்டுகிறது,
பணம் பறிக்கும் தரங்கெட்ட கூட்டம்.

காதலிக்க விருப்பமில்லை,
என்று கூறும் பெண்களை
கொல்கிறது குரூர கூட்டம்.

தமிழனின் பண்பாடு எங்கே போயிற்று?
பெண்களைப் படிக்கவிடாமல்,
முன்னேற விடாமல்,
துரத்தும் அழுகிய பிண்டங்களை,
அப்புறப்படுத்தும் நாளும் வருமோ?
அநாகரீகத்தை, அசிங்கத்தை,
அப்புறப்படுத்தும் காலம் வருமோ?

மாணவிகளைத் துன்புறுத்தாமல்,
தூரம் செல்லுங்கள் சனியன்களே.

கணேஷன் குருநாதன்

Leave a Reply