அறம் செய்ய பழகு

தங்க. வேல்முருகன்

0
1445

பொருள், சொல், செயலால்
அள்ளிக்கொடுக்கும்
மனம்
அறமனம்
அதைப் பெற்று மகிழ்ந்து
வாழ்த்தும்
பிறர் மனம்.

எவ்வளவு நாட்களுக்குத்தான்
நாமும்
இல்லை யென்றே
சொல்லிக்கொண்டே இருப்போம்
இருப்பதில்தானே
பகிறப்போகிறோம்
அறம் செய்து பகிறவே
உழைப்போமே!

ஏழைகள்
எப்படி அறம் செய்ய முடியும்
என்கின்றீர்களா?
அவர்கள் சொல்லாலும்
செயலாலம் அன்பாலும்
அரவணைத்தாலும் அறம் தான்.

உலகம் நிரந்தரம்
ஆனால்
நாம் நிரந்தரம் இல்லாத
இடத்தில்
வாழ்கிறோம்
இருந்த இடம் தெரிமால் போகிறோம்.

வாழ்விற்கு
கிடைத்த வரம்
அறம் செய்தளே
இயங்காத இதயத்திற்கும்
எதையும் கொடுத்து
உயிரைச் செய்வோம்.
உறவை வளர்த்து
வாழ்வாங்கு வாழ்வோம்.

தங்க. வேல்முருகன்

Leave a Reply