பாதுகாவலர்கள்

ப.உ. தென்றல்

0
157

கடவுளின் திருவுருவங்களை
வைத்திருக்கிறேன்.
அதிக நேரம் புழங்கும்
சமையலறையில் ஓர் அடுக்கில்.

பூசை அறை என்று,
ஒன்று வைத்துப்
பிரிக்க விரும்பவில்லை
அவர்களை.

அப்பா வணங்காத கடவுள்களை
நான் வணங்குகிறேன்
பாதுகாவலர்களாய் எண்ணி.

கட்டுப்பாடுகள் எதையும்
வைத்துக் கொள்வதில்லை.
தொடுகிறேன்.
விளக்கை ஏற்றுகிறேன்.
தடை ஏதுமின்றி
எல்லா நேரங்களிலும்,
காலங்களிலும்.

மன ஓட்டத்தையும் ,
இன்பங்களையும்,
துன்பங்களையும்
பார்த்துக் கொண்டிருக்கும்
பார்வையாளர்கள்
என்பதால்,
அடிக்கடி எதையும்
கேட்பதுமில்லை,
சொல்வதுமில்லை,
அவர்களிடம்.

விரும்பும்
வாழ்த்தும்
இருக்கும்
இல்லாத,
மனிதர்களாய் அவர்கள்
என்றென்றும் எனக்கு.

ப.உ. தென்றல்

Leave a Reply