எங்கே படித்தது இதயம்

தங்க. வேல்முருகன்

0
104

இதயம் எங்கே சென்று
படித்தது இயங்குவதற்கு
மூச்சு விடும் நேரமெல்லாம்
முயற்சியெடு.

நாம் வாழ்வதற்கு
எல்லா உறுப்புகளும்
தானாக இயங்கும் போது,
நாம் சோம்பேறிகளாக
வாழ்வதில்
என்ன அர்த்தம்.

தன்னம்பிக்கை வாசல்
திறந்தே கிடக்கிறது
உலகில்.

அதில் நீ
நுழைந்து மனத்திட்பம்
கொண்டு உழைத்தால்
நீயும் வாழலாம்
நல்ல பலம் கொண்டு.

வையகம் போற்ற
பிறருக்கும் செய்யலாம்
பலத்தொண்டு.

தங்க. வேல்முருகன்

Leave a Reply