அரிது நீ

தங்க. வேல்முருகன்

1
112

பிரம்மன் படைத்ததில்
அரிதினும் அரிது நீ
தன்னம்பிக்கையின் மூத்த விதையும் நீ

உயிர்களின் கொடையாளி நீ
அன்பின் ஊற்று நீ
கல்வியின் நாற்றும் நீ
வாழ்வுக்கு வழி நீ
அது வளர்வதற்கு உரமும் நீ

எளிதில் ஏமாறும் இளகும் மனதும் நீ
எதையும் தாங்கும் இதயம் நீ

ஏமாற்றுபவரையும் தண்டிக்கின்றாய்
ஏமாறுபவரையும் கண்டிக்கின்றாய்

உலகம் உன்னை படைத்தது
நீ உலகத்தில் உயிரைப் பெருக்கும் அருவி

உணர்வால் உயிருடன் உரசி உந்திக்கொண்டே
இருக்கும்
ஒரு உன்னதத்தின் கருவி நீ

தாய் என்ற நீ
உலகிற்கு கிடைத்த அரிதிலும் அரிது நீ!

தங்க. வேல்முருகன்

1 COMMENT

Leave a Reply