உயிர்

ப.உ. தென்றல்

0
57

வீட்டில்
செடிகள் தரும்
அழகை விட
வேறு எது
தந்து விட முடியும்?

ஊருக்குப் போய்
வரும்போதெல்லாம்
செடிகளுள் ஒன்றின்
உயிர்த்துறப்பு
வழக்கமாகி விடுகிறது.

உயிர்ப்பிழைக்க
வழிய வழிய நீரை
ஊற்றியும்,
வருத்தத்தைத் தவிரப்
பலன் ஒன்றும் இல்லை.

அக்கம் பக்கத்தில்
நீர் ஊற்றச்
சொல்லிவிட்டுத்தான்
செல்கிறேன்.

இருந்தும்
அன்பாய் ஊற்றுவதற்கும்,
ஒப்புக்குச் செய்வதற்கும்,
உள்ள வேறுபாட்டை
அறிந்து கொள்கின்றன
செடிகள்.

ப.உ. தென்றல்

Leave a Reply