எது நம் வழி?

தீ.கோ. நாராயணசாமி

0
431

அரும்பெரும் சோதியாய்க்
கடவுளைக் கண்டவர்
ஆலவாயர்க்குப்
பூசை செய்திட
திருப்பெருந் துறையில்
கட்டினார் ஓர் ஆலயம்.

அருட்பெருஞ் சோதியாய்க்
கடவுளைக் கண்டவர்
மாந்தர்க்குப்
பசிப்பிணி ஆற்றிட
வடலூரில்
நாட்டினார் ஓர் தருமச்சாலை.

அருள் வேட்டல் மணிவாசகர் வழி
அருள் காட்டல் வள்ளலார் வழி
இவற்றுள் எது நம் வழி?

தீ.கோ. நாராயணசாமி

Leave a Reply