ரஷ்யாவில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு..!

0
100

கருண் வெங்கடேஷ் / தினேஷ் குமார்
(வோல்கோகிராட் பல்கலைக்கழக மருத்துவ மாணவர்)

உலகமே கொரோனாவுடன் போர் நடத்தி கொண்டிருக்கும் போது அதற்கான மருந்து உள்ளதென்று கடந்த மாதம் ரஷ்யா அறிவித்தது. ஒன்றல்ல இரண்டல்ல ஏறத்தாழ 10 வகையான மருந்துகளை செயல்படுத்திப் பார்த்து, அதிலிருந்து இரண்டு மருந்துகளை அறிவித்து உள்ளனர்.

என்னென்ன மருந்துகள்?
அவிஃபாவிர் (Avifavir) என்னும் வைரஸ்களுக்கு எதிரான மருந்தும் லெவிலிமேப் (Levilimab) எனும் மருந்தும் பயன்படுத்தப் படுகிறது. இதில் அவிஃபாவிர் மருந்து ஏற்கனவே இன்புளுயன்சா எனும் நோயிற்கும் இன்னும் ஏன் எபோலாவுக்கும் கூட பயன்படுத்தப்பட்ட ஒன்று. அதில் இன்னும் சில மாற்றங்கள் செயய்பட்டு அதன் தன்மையை மாற்றி புதிய வகையாக வெளியிட்டுள்ளனர். இந்த இரண்டு மருந்துகளும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளன. இந்த மருந்துகள் RNA வைரஸ் ஆன கொரோனோ வைரஸின் பிரதியெடுக்கும் தன்மையை உடைத்து, அந்த வைரஸை மேலும் உடலில் செயல்படாத வண்ணம் மாற்றுகின்றது. உதாரணமாக மாட்டுவண்டியின் அச்சை உடைத்துவிட்டால் அது இயங்குமா? அது போல தான்.

இதில் இரண்டு மருந்துகளுக்கும் பண்பு வேறு. அவிஃபாவிர் மருந்து இன்குபேசன் ப்ரீயட் எனும் நோய் அருகும் காலத்தில் இருக்கும் நோயாளிகளுக்கும், நோயின் தாக்கம் அதிகமாக இல்லாத நோயாளிகளுக்கும் வழங்கப்படுகிறது.

லெவிலிமேப் என்ற மருந்து நோயின் தன்மை அதிகமாகவும், வென்டிலேட்டர்-ல் வைக்கும் அளவு தேவை உள்ள நோயாளிகளுக்கும் வழங்கப்படுகிறது. இத்தனை நாளாய் சாதாரணமாகவே கொரோனா நோயை மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனரே, இது என்ன புதுசா? என்றால், இந்த மருந்துகளை ஆய்வுக்காக பயன்படுத்திப் பார்க்கும் போது, சாதாரண மருந்துகளை 45 பேருக்கும், அவிஃபாவிர் மருந்தை 35 பேருக்கும் கொடுத்து அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை பார்த்தனர். அதில் சாதாரண மருந்துகளை எடுத்துக்கொண்ட நோயாளிகள் அந்த வைரஸின் தாக்கத்திலிருந்து மீள பொதுவாக 12 நாள்கள் எடுத்துக் கொண்டனர். ஆனால் அவிஃபாவிர் எனும் புதிய மருந்தை எடுத்துக் கொண்டவர்கள் 4 நாள்களில் வைரஸின் தாக்கத்திலிருந்து வெளிவந்தனர்.

இதில் முக்கியமான விசயம், அதிக உடல் வெப்பநிலையும் கட்டுபாட்டுக்குள் விரைவில் வந்தது.
மேலும் லெவிலிமேப் என்ற மருந்தை பயன்படுத்தி உயிரிழப்புகள் ஏற்படும் விகிதத்தை குறைந்துள்ளனர்.
இந்த மருந்துகள் தற்போது ரஷ்யாவில் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த மருந்தினை மற்ற நாடுகளுக்கும் வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.

Leave a Reply