ஜூலை 22-ஆம் தேதியிலிருந்து, கர்நாடக மாநிலத்தில் கொரோனா நிமித்தமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக, அந்த மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார் எனச் செய்திகள் வந்துள்ளன.
ஊரடங்கு என்பது கொரோனவை கட்டுப்படுத்துவதற்கான வழி அல்ல என்றும், மாநிலத்தின் பொருளாதாரம் முக்கியம் என்றும், பொருளாதாரத்தை வளர்த்துக்கொண்டே கொரோனவை ஒழிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் கூறியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா முதலமைச்சரின் இந்த முடிவானது, தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சித்தர் திருத்தணிகாசலம் அவர்களது கூற்றினை, தமிழக மக்களுக்கு நினைவுபடுத்தலாம். இவர் ஊரடங்கு இல்லாமலேயே கொரோனவை கட்டுப்படுத்தலாம் போன்ற கருத்துக்களைக் கூறியும், தன்னிடம் கொரோனாவுக்கு மருந்து உள்ளது எனக் கூறியும், அதன் காரணமாகக் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார்.
கொரோனா பற்றி எவரும் அதிகமும் அறியாத நாட்களில், திருத்தணிகாசம் கூறிய கருத்துக்கள் சர்ச்சையானவை எனக் கருதி தமிழக அரசு கைது செய்ததை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக் கருதலாம். ஆனால் தற்போது ஒரு மாநிலத்தின் முதல்வரே ஊரடங்கு என்பது தீர்வு அல்ல எனக் கூறியதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன, இந்த நிலையில், இன்னமும் திருத்தணிகாசலம் அவர்களைச் சிறையில் அடைத்து வைத்திருப்பது சரி அல்ல என்றே தமிழக மக்கள் கருதுகிறார்கள்.
எந்த ஒரு ஜனநாயக சமூகத்திலும், மாற்றுக் குரல்களுக்கு இடம் இருக்க வேண்டும், திறந்த மனதுடன் புதிய விஷயங்களை அணுக வேண்டும், அப்போதுதான், எது சரி? எது தவறு? என்பது மக்களுக்குத் தெரியவரும்.
கர்நாடக முதல்வர் ஊரடங்கு தீர்வல்ல எனக் கூறி இருப்பது, திருத்தணிகாசலத்தின் கூற்றுச் சரிதானா என்கிற எண்ணத்தைத் தமிழக மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.
கணேஷன் குருநாதன்
தொடர்புடைய மற்ற கட்டுரைகள்:
மாற்றுக்குரல்கள்
திருத்தணிகாசலம் அவர்களை விடுவிக்க வேண்டும்
திருத்தணிகாசலம் – எப்போது சிறையிலிருந்து மீள்வார்?
குறிப்பு: செய்திகளைத் உடனுக்குடன் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல செய்திகள் / படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.
அரசு ஊரடங்கு என்று முடிவு எடுத்துவிட்டு டாஸ்மாக் திறந்து அதற்கு போலிஸ் பாதுகாப்பும், டீ கடைகளை திறக்ககூடாது என்பதும் அரசின் பொருளாதார ஆதாயத்துக்காக இருக்கலாம். அரசு எடுத்த முடிவுகளில் சில குளறுபடிகள் இருந்தது என்னமோ உண்மைதான். ஜெ ஆட்சியில் அரசு அதிகாரிகள் செயல்பட்டது போல் செயல்பட வில்லை என்றே சொல்லலாம். டெங்கு, சிக்கன் குனியா வந்தபோது மலவேம்பு கிழாயம் மருத்துவமனைகளிலும், முக்கிய நகராட்சி, கிராம பஞ்சாயத்துகள், வீதிகளிலும் பரவலாக அனைவருக்கும் கிடைக்க ஏரபாடுகள் செய்யபட்டது. கொரோனா என்றவுடன் கபசுர நீர் கொடுங்கள் என்று திரு தணிகாசலம் போன்றோர் சொன்னதை நிறைவேற்றவும் இல்லை.அவர்மீது இருந்த காழ்புணர்ச்சி காரணமாக அவரை கைது செய்து எதிர்வினையாற்றியது. கபசுரநீரை அரசு முன் செய்த்துபோபோல் அனைத்து பகுதிகளுக்கும் வழங்க உத்தரவிட்டிருந்தால் தமிழ்நாடு மற்ற மாநிலத்திலும் கொரோனாவை கட்டுபடுத்தியிருக்கலாம். அதனால் எந்தபக்கவிளைவும் இல்லை என்பதால் பரிந்துரை அரசு செய்திருக்கலாம். அவரும் மத்திய அரசையும் அணுகிபார்த்தார் பலன் இல்லை. கொரோனாவிர்க்கு பயப்பவேண்டாம் என்று சொன்னாலும் பெரிய மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், போலிஸ் என்று உடல்நலனை சரியாக பராமரிப்பவர்கள் அவர்களே நோயால் பாதிக்கபட்டுள்ளார்கள் என்பதால் கொரோனாவிர்கு அஞ்சவேண்டியுள்ளது. மத்தியில் ஆளும்கட்சி ஆசி இருந்தால் என்ன முடிவையும் கர்நாடக அரசு செயல்படுத்தலாம்.
கே. கோவிந்தன்