கம்போடியா நாட்டில் தமிழர்களுக்கான தொழில் வாய்ப்புகள்

சீனுவாசராவ் & ஞானசேகரன்

10
3215

நாங்கள் இருவரும் 1986 முதல் 2016 வரை 30 ஆண்டுகளாக உலகை எட்டு முறை தரை மார்க்கமாக, அணு ஆயுதங்களை குறைப்பதற்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், 120 நாடுகளுக்கு ஏறத்தாழ 10 லட்சம் கிலோமீட்டர்கள் தூரத்தை, அனைத்து கண்டங்கள் வழியாக பயணம் செய்து இருக்கிறோம். பல நாட்டுத் தலைவர்களையும், ஐக்கிய நாட்டு பொதுச்செயலாளர்களையும் சந்தித்து எங்களது கருத்துக்களை வலியுறுத்தி இருக்கிறோம். எங்களது ஆக்கப்பூர்வமான பணியைப் பல நாடுகள் பாராட்டி இருக்கின்றன.

அமெரிக்கா எங்களது தினமாக ஒரு தினத்தை அறிவித்து பாராட்டியது. எங்களது உலகப் பயணம் முடிந்ததும், நாங்கள் கம்போடியா நாட்டைத் தேர்ந்தெடுத்து, இங்கு சுற்றுலா நிறுவனம் ஒன்றும், இரண்டு இந்திய உணவு விடுதிகளும், முந்திரி ஏற்றுமதி தொழிலும் நடத்தி வருகின்றோம்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில், கம்போடியா 2017ஆம் ஆண்டில் இருந்து மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாகும், இந்த நாட்டில் அமைந்துள்ள, உலக அளவில் பிரபலமான “அங்கோர்வாட்” பிரதான சின்னத்தைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏறத்தாழ 55 லட்சம் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கம்போடியாவுக்கு வருகிறார்கள். இதன் காரணமாக சுற்றுலாத் துறையை சார்ந்த தொழில்களான தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், கைவினைப் பொருட்களுக்கான தொழில்கள், என அனைத்து விதமான தொழில்களும் லாபகரமாக நடந்து வருகின்றன. தற்போதைய கரோனா பாதிப்பினால் உலகம் முழுவதிலும் சுற்றுலாத்துறை பாதிப்படைந்து உள்ளதைப் போல, கம்போடியா நாட்டிலும் சுற்றுலாத்துறை சார்ந்த தொழில்கள் அனைத்தும் தற்காலிகமாக தேக்க நிலையை அடைந்துள்ளன.

பல 5 நட்சத்திர ஓட்டல்கள், 4 நட்சத்திர ஓட்டல்களை ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் பல நாடுகளைச் சார்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள். உலகம் இயல்பு நிலைக்கு திரும்பும் தருணத்தில், சுற்றுலாத்துறை சார்ந்த அனைத்துத் தொழில்களும் மீண்டும் இலாபகரமானத் தொழிலாக மாறும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை. இந்த தற்காலிக தேக்கம் காரணமாக, பல ஐந்து நட்சத்திர மற்றும் நான்கு நட்சத்திர தங்கும் விடுதிகள் விற்பனைக்கு வந்துள்ளன, அப்படியான விடுதிகளை, இந்த தற்காலிக தேக்க காலத்தில், வியாபார யுக்தியோடு, பொருளாதார பலம் கொண்டவர்கள் வாங்கினால். எதிர்காலத்தில் லாபகரமான தொழிலாக மாற்றலாம்.

கம்போடியா சிறப்பான நீர்நிலை ஆதாரத்தைக் கொண்ட நாடு. இந்நாட்டில் ஆசியாவிலேயே, ரஷ்யாவில் உள்ள மிகப் பெரிய ஏரியான பைக்கால் ஏரியை அடுத்து, இரண்டாவது பெரிய நன்னீர் ஏரியாக டோன்லேசாப் இருக்கிறது. இந்த ஏரி பெரும் நீர் ஆதாரத்தை ஆண்டு முழுவதும் கொண்டதாகும். சாதாரண காலங்களில் இந்த ஏரி 100 கிலோமீட்டர் அகலமும், 250 கிலோமீட்டர் நீளமும், ஏறத்தாழ 2,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும். மழைக் காலமான ஜூன் முதல் நவம்பர் வரை இந்த ஏரி மேலும் பரந்து விரிந்து பெருமளவு நீரை தன்னகத்தே பெற்று கடல் போல மாறிவிடும். பொதுவாகவே கம்போடியா காலத்திற்கேற்ப மழையை பெறும் நாடு என்பதால், இங்கு மக்கள் விவசாயத்தை தங்களுக்கு தேவையான அளவு மட்டும் செய்துகொண்டு மனநிறைவோடு வாழ்ந்து வருகின்றனர். சில விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கு, ஜாஸ்மின் அரிசி மற்றும் முந்திரி போன்ற பணப் பயிர்களைப் பயிரிட்டு தங்களது பக்கத்து நாடுகளான தாய்லாந்து, வியட்நாம் மற்றும் சீனா நாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

சீனாவின் வியாபாரிகள் கடந்த சில ஆண்டுகளாக தாங்களே கம்போடியாவின் உற்பத்தியாளர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு 30 சதவிகிதம் மரவள்ளிக்கிழங்கு உற்பத்திக்கான பணத்தை கொடுத்து விவசாயிகளை ஊக்குவித்து, அவர்களது முழு விளைப்பொருட்களையும் வாங்கி சீனாவிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். அதேபோன்று வியட்நாம் நாட்டின் வியாபாரிகளும், கம்போடியாவில் விளையும் முந்திரியை முன்பணம் கொடுத்து விவசாயிகளை தன் பக்கம் வைத்துக் கொள்கின்றனர். எனவே, தற்போது கம்போடியாவின் விவசாயிகள் பலரும் மரவள்ளிக்கிழங்கு மற்றும் முந்திரிகளை பயிரிடுவதற்கு பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் மூலம் பெருகும் வருமானத்தைக் கருத்தில்கொண்டு கம்போடிய அரசு தற்போது உள்ள 500,000 ஹெக்டேர் பயிரிடப்படும் நிலையிலிருந்து பலமடங்கு பரப்பளவிற்கு முந்திரியை பயிரிடுவதற்காக சீனா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளுடன் இணைந்து கடுமையாக செயலாற்றி வருகிறது. தற்போதைய 200,000 டன் முந்திரி உற்பத்தியிலிருந்து, 2022 ஆம் ஆண்டிற்குள் 500,000 டன் உற்பத்தியை அடைய திட்டம் தீட்டி விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையை நமக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு தமிழர்களும் இங்கு பணப்பயிர் விவசாயத் தொழிலில் ஈடுபடலாம். சீனா மற்றும் தென் கொரிய வியாபாரிகள் இங்கு கம்போடியாவில் பெருமளவில் நிலத்தை வாங்கி முந்திரி, மரவள்ளிக்கிழங்கு, ரப்பர் தோட்டம் மற்றும் ஆமணக்கு பண்ணைத் தோட்டம் என தங்களது பணப்பயிர் விவசாயத்தை மெல்ல விரிவுபடுத்தி வருகின்றனர். அதே போன்று நாமும் இங்கு பெருமளவில் விவசாய நிலங்களை வாங்கி விவசாயத் தொழில்கள் செய்து பணம் ஈட்டலாம்.

இங்கு முந்திரி ஏராளமாக உற்பத்தி செய்தாலும், அவற்றை பெரும்பாலும் வியட்நாம் பச்சை முந்திரியாக வர்த்தகம் செய்து, தங்களது நாட்டுக்கு கொண்டு சென்று, அங்கு அவற்றை பதனீட்டம் செய்து உலகம் முழுவதும் முந்திரிக் கொட்டைகளை ஏற்றுமதி செய்து பெருமளவு லாபம் ஈட்டுகிறது. கம்போடியாவில், பச்சை முந்திரிகளை பதனீட்டம் செய்யும் தொழிற்சாலை பெருமளவு இல்லை. அப்படியான தொழிற்சாலைகளை அமைத்து லாபகரமான தொழிலில் ஈடுபடலாம். இங்கிருந்து முந்திரிகளை ஐரோப்பா, மத்தியகிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெருமளவு பணம் ஈட்டலாம்.

அதே போன்று மரவள்ளிக் கிழங்குகள் இங்கு ஏராளமாக பயரிடப்பட்டு அவை பச்சையாகவே தாய்லாந்திற்கும் வியட்நாமிற்கும் தரை மார்க்கமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு அவற்றை மாவுகளாக்கி இந்தியா மற்றும் ஏராளமாக சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பணம் ஈட்டப்படுகிறது. நாமும் கம்போடியாவில் மரவள்ளிக் கிழங்கு பதனீட்டம் செய்யும் மாவு தொழிற்சாலை தொடங்கி பெரும் லாபத்தை ஈட்டலாம். கம்போடியாவின் மரவள்ளிக் கிழங்கு நல்ல தன்மையைப் பெற்றிருப்பதால், இதன் மாவிற்கு சீனாவிலும் மற்ற நாடுகளில் மதிப்பு அதிகம்.

சீனர்கள் ஆமணக்கு பண்னை விவசாய நிலங்களை வைத்து லாபகரமான தொழிலில் ஈடுபடுவது போல, நாம் பெருமளவு நிலங்களை வாங்கி பல பயிர்களை பயிர் செய்து, அவற்றை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் ஈட்டலாம்.

மேலும், இங்கு விவசாய நிலங்களை வாங்கி, அவற்றில் இயற்கை விவசாயம் செய்து, அதில் விளையும் காய்கறிகளையும், விளைபொருட்களையும், இங்கு கம்போடியாவில் விற்பனை செய்தும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதிக்கலாம், மற்றும் இயற்கை விவசாயங்களுக்கான உரங்களை உற்பத்தி செய்து கம்போடிய விவசாயிகளுக்கு விற்றும் லாபம் ஈட்டலாம்.

கம்போடியா தற்போது பல்வேறு பகுதிகளை விவசாய பயன்பாட்டிற்காக கடந்த சில ஆண்டுகளாக அனுமதித்து இருப்பதால், நாம் ஆரம்பிக்கும் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களை வாங்குவது பெரிய பிரச்சனையாக இருக்காது. தற்போதைய கரோனா சூழ்நிலையில், பலர் நிலங்களை குறைவான விலைக்கு விற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கம்போடியா தங்களது மின்சாரத் தேவைகளுக்காக சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய பெருமளவு ஊக்கப்படுத்துகிறது, எனவே சூரிய சக்தி மின்சார உற்பத்திக்கும், காற்றாலை மின்சார உற்பத்திக்கும் கம்போடியா நாட்டில் தொழில் தொடங்க முயற்சிக்கலாம்.

“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என தமிழர் மூதாட்டி ஔவையார் கூறி உள்ளது பழமொழி மட்டும் அல்ல, இக்காலத்திற்கும் ஏற்ற நவீன மொழி.

சீனுவாசராவ் & ஞானசேகரன்

குறிப்பு: இந்த கட்டுரையைப் போன்ற ஆக்கச்செழுமையான படைப்புகளைத் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.

10 COMMENTS

  1. நான் சிறிய அளவிலான டெக்ஸ்டைல் ஷோரூம் மற்றும் Hardware Shop’ ஐ திறக்க விரும்புகிறேன்… உங்களின் ஆலோசனை தேவை.

  2. வணக்கம் ஐயா. தங்களுடைய கட்டுரையை படித்த பின்பு எனக்கும் கம்போடியாவில் விவசாயம் சார்ந்த தொழில் செய்யலாம் என்றுள்ளேன். அதற்கு குறைந்த மூலதனம் எவ்வளவு தேவைப்படுமா ஐயா? என்னுடைய எண் +91-7871605624, 8300583293.

    • தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள, கம்போடியா தொழில் வாய்ப்பு பற்றி மேலும் அறிய கட்டுரையாளரைத் தொடர்பு கொள்ளவும். அவரது மின்னஞ்சல் vpsggtravels(at)gmail(dot)com

  3. இந்த கட்டுரையை எழுதிய சீனிவாசன் ஞானசேகரன் இருவரும் பாண்டி சேரியை சேர்ந்தவர்கள். இவர்களின் பல பயண கட்டுரையை படித்து உள்ளேன். இருவரின் தொடர்பு எண் கிடைக்குமா?

    • தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள, கம்போடியா தொழில் வாய்ப்பு பற்றி மேலும் அறிய கட்டுரையாளரைத் தொடர்பு கொள்ளவும். அவரது மின்னஞ்சல் vpsggtravels(at)gmail(dot)com
      Reply

  4. குறைந்த முதலீடு எவ்வளவு பண்ணலாம் அண்ணா !

    ஜெய்மணி மயிலாடுதுறை
    9944522685

    • தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள, கம்போடியா தொழில் வாய்ப்பு பற்றி மேலும் அறிய கட்டுரையாளரைத் தொடர்பு கொள்ளவும். அவரது மின்னஞ்சல் vpsggtravels(at)gmail(dot)com

  5. பயனுள்ள தகவல் எனக்கு நானும் எனது நண்பரும் கம்போடியாவில் ஒரு foodcourt தொடங்க plan பண்ணியிருந்தோம் அதற்குமுன் அங்கு ஒரு பயணம் சென்றுவர இருந்த நிலையில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது corona முடிந்த பிறகு கண்டிப்பாக பயணிப்போம் தங்கள் கட்டுரைமூலம் கம்போடியா பற்றி பலதகவல்கள் அறியமுடிந்ததில் மகிழ்ச்சி.

    • தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள, கம்போடியா தொழில் வாய்ப்பு பற்றி மேலும் அறிய கட்டுரையாளரைத் தொடர்பு கொள்ளவும். அவரது மின்னஞ்சல் vpsggtravels(at)gmail(dot)com

Leave a Reply