பங்குச்சந்தை வளம் தருமா?

குரு. கோபாலகிருஷ்ணன் MBA

0
144

மனித இனத்தின் முன்னேற்றத்தில், பொருளாதார உயர்வு என்பது பல நிலைகளில் வளர்ச்சியடைந்துள்ளது. இன்று ‘பணம்’ மனிதர்களின் வாழ்க்கை நிலையை தீர்மானிப்பதில் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது என்பதனை எவரும் மறுக்க இயலாது.

குழந்தைப் பருவத்திலிருந்து பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டே படிப்பு, வேலை, தொழில் ஆகியவற்றை தீர்மானிக்கும் சூழல் உள்ளது. இத்தகைய போக்கினால் பணம் சம்பாதிப்பது மட்டுமே முக்கிய நோக்கமாகிவிட்டது. இப்படி சம்பாதித்த பணத்தை முறையாக செலவு மற்றும் சேமிப்பு செய்பவர்களால் எளிதில் செல்வ வளத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

பங்குச்சந்தை முதலீட்டில் கூடுதலான வளர்ச்சி இருக்கும். கூடுதல் வளர்ச்சி இருக்கும்போது அதற்குரிய இடரும் (Risk) இருக்கவே செய்யும். பொருளாதார ஏற்றத்தாழ்வு காலங்களிலும் பல்வேறு உத்திகள் மூலம் இதில் சம்பாதிக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

பங்குச்சந்தையில் ஈடுபட விரும்புவோர் அதைப்பற்றிய முழு விபரங்களையும் அறிந்து, பயிற்சி செய்தபிறகு ஈடுபட்டால் மட்டுமே லாபம் பெறமுடியும்.

பங்குச்சந்தை என்பது; Bonds, Shares, Derivatives, Mutual Fund மார்க்கெட் என்று இயங்குகின்றது. நீண்டகால நோக்கில் முதலீடுசெய்ய Mutual fund சிறந்தது. இது பணவீக்கத்தை கடந்த வருமானம் தரக்கூடிய ஓர் முதலீட்டு முறை.

மாதவருமானம் பெறுவோர் தங்களது தொழிலில் முழுக்கவனம் செலுத்திக்கொண்டு, ஓர் குறிப்பிட்ட தொகையை SIP (systematic Investment Plan) முறையில் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால் மிகப்பெரிய ஓர் தொகையினைப் பெறமுடியும்.

அதிகமான Fund களில் முதலீட்டை மேற்கொள்ளாமல்; Large Cap Fund, Multi Cap Fund, Hybrid(Balanced) Fund, Debt Fund
போன்ற பிரிவுகளில் தலா ஒவ்வொரு Fund தேர்ந்தெடுத்து தொடர்ந்து முதலீடுசெய்யலாம்.
Mutual Fund பற்றி விபரம் அறிந்தவர்கள் தங்கள் பொருளாதார நிலைக்கு தகுந்தவாறு முடிவுகளை மேற்கொள்ளலாம்.

பங்குசந்தையில் முதலீடு செய்யுங்கள். பொருளாதார வளம் காணுங்கள்.

(* பங்குச் சந்தை முதலீடு என்பது இடர்களுக்கு (Risk) உட்பட்டது)

குரு. கோபாலகிருஷ்ணன் MBA

Leave a Reply