அன்பு

சரவிபி ரோசிசந்திரா

1
297

அசாதாரண வார்த்தையில்
ஆர்பரிக்கிறாய் ஆழ்மனதில்

ஆழி அலைகளிலே
அலைகிறது என்மனமும்
அமைதியாய்

தேளாய் கொட்டினாலும்
தேனமுது தெவிட்டினாலும்
இன்னமுது படைத்தாலும்
இன்னல் பல தந்தாலும்

துடிக்கின்ற இதயத்ததை
நிறுத்திட இயலாது

தூவானம் துவண்டாலும்
பூ மணம் மடிந்தாலும்
புன்னகைப் புதைந்தாலும்

பூத்திடுமே என் மனதில்
உன் நினைவு மத்தாப்பு

கார்மேக சிவந்தாலும்
கடுஞ்சினம் கொண்டாலும்
கல்லாய் மனம் போனாலும்
காத்திருப்பேன் சிலையாக

கரம்பிடித்த நாள் முதலாய்
வெண்மேகம் நானாக
செம்பரிதி நீயாக

பொருத்தமில்லா
இணையென்று
தூற்றுவோர் பலரிருக்க
பாவம் என்ன தெரியும்
அவர்களுக்கு
காதலின் கவிரசமும்
காட்டாறு கனியமுதும்

அட்சயபாத்திரமாய்
அன்பிருக்க
அள்ள அள்ள பெருகுமே!
கடுகளவும் சிறுகாதே!

சரவிபி ரோசிசந்திரா

1 COMMENT

Leave a Reply