தேடுகிறேன்

ப. உ. தென்றல்

0
99

‘புறம்போக்கு’ என்றுதான்
எண்ணி இருந்தேன்.

‘எங்க காடு ‘
‘வீடு கட்டப் போறோம்’
உரிமையுடன் வந்தார்கள்.

மரங்களை அழித்தார்கள்
செடிகளை அழித்தார்கள்
‘பாம்பு பயம் இனி இல்ல’-
பசுமையை மொத்தமாய்
அழித்து விட்டுச் சென்றார்கள்.

குருவிகளும், மயில்களுமாய்
வேடிக்கைக் காட்டிய இடம்
வெறுமையாய்க் கிடக்கிறது
இன்று.

நின்று நின்று பார்க்கிறேன்
என் தோட்டத்தில்
நான் வளர்க்கும் மரம் செடிகளுடன்.

நித்தம் நித்தம் தேடுகிறேன்
இழந்து விட்ட ஒன்றை
இடம் பெயர்ந்த பறவைகளை

அதோ அங்கே ஓசைகள்!
அதோ அங்கே குருவிகள், மயில்கள்

ப. உ. தென்றல்

Leave a Reply