நல்ல செயலி (ஜும்)

தங்க. வேல்முருகன்

0
239

நீ வீட்டு அறைகளை
மேடையாக்கி அழைத்து
தோப்பாக்கி
அறிஞர்களை
புதியவர்களை
ஒன்றிணைக்கும்
மேதை.

கொரோனா முடக்கங்களில்
எங்களுக்கு
முட்டுக்கொடுத்து
மொழிகளாலும்
வீட்டிலிருந்து அலுவலகப்
பணிகளையும் பார்க்க வைத்து
உறவை இணைக்கும்
சோம்பேறிகளாக்காதப்
பள்ளிக்கூடம்.

நம்மை இணைக்கும்
நண்பர்
இணையம் என்ற
இதயம்
உலகை உறங்காமல்
வைக்கும் உதயம்.

எங்களை
பயணிக்க வைக்கும்
மென்பொருள்
கைப்பேசி
கணினிகள் யாவையும்
உன் நரம்புகளாக்கி
நிர்கதியாய் நின்ற
நாட்களை நிமிர்த்திட
இணையவழிக் கூரையால்
பலர்கூடி ஒன்றாகும்
மனிதவியல் பூங்கான்னு
மனம் அழைக்குது உன்னை.

இக்கொடிய நாட்களில்
உயிர்
‘தப்புமா, தப்பாத’ என்று
கொஞ்சமாய்
தமிழுறவுகளோடு
கொஞ்சினோம்
தமிழின் சிறப்பினை
ஆழமாகவும் மேய்ந்தோம்
உன் அவதரிப்பால்.

சாகாத உயிர்
நீ
எங்களைச்
செயல்பட
வைக்கும்
ஒரு நல்ல செயலியும் நீ.

தங்க. வேல்முருகன்

Leave a Reply